கடந்த இரண்டு நாட்களாக இணையதளத்தில் வலம் வரும் பெயர் ஃபுரூனோ ( Bruno). யார் இந்த புரூனோ அதைப்பற்றி பார்க்கும் தொகுப்பே இது.
9 வயதாகும், அழகிய கருப்பு நிறத்தில் இருக்கு லாப்ரடர் (labrador) வகை நாய்தான் ஃபுரூனோ. வசீகருக்கும் கறுமையான தேகத்துடன், எச்சில் வழியும் நாக்கை வெளியே நீட்டி ஃபுரூனோ ஓடும் விதத்தை பார்த்தால், அனைவரும் ரசித்துவிடுவர். அப்படி இருக்கும் ஒரு நாய்யை கட்டையால் அடித்து மூவர் கொன்றுள்ளனர். விலங்குகளிலேயே மனிதர்களுக்கு நெருக்கமாகவும், ஆபத்து நேரத்தில் தனது உரிமையாளர்களை காப்பாற்றும் பிராணிகள் நாய் குட்டிகள். மனிதர்களோடும், குழந்தைகளோடும் நாய் குட்டிகள் விளையாடும் வீடியோக்களுக்கு யூடியூபில் எப்போதும் பார்வையாளர்கள் அதிகம். ஆனால் தற்போது வைரலாகி வரும் இந்த ஃபுரூனோவை தாக்கும் வீடியோ யாரையும் அழ வைத்திடும். மனிதனிடத்தில் எப்போதும் விசுவாசமாகவும், அன்பாகவும் இருக்கும் ஒரு விலங்கை இப்படி அடித்து சித்திரவதை செய்ய முடியுமா என்பதுபோல இருக்கிறந்து இந்த வீடியோ.
கேரளாவில் உள்ள அடிமலத்துரா பகுதியில் வசித்து வரும் கிரிஸ்துராஜின் செல்ல நாய்தான் ஃபுரூனோ. கடற்கரைக்கு ஓடி சென்ற ஃபுரூனோ வெகு நேரமாக திரும்பவில்லை. இதனால் ஃபுரூனோவைத் தேடி கிரிஸ்துராஜின் உறவினர் ஆண்ரூ கடற்கரைக்கு சென்றபோது, கரையில் இருக்கும் படகில் ஃபுரூனோ கட்டப்பட்டிருந்தது. மூன்று இளைஞர்கள் கையில் கட்டையுடன் அந்த வெறிச்செயலை நிகழ்த்த காத்திருந்தனர். ஃபுரூனோ காப்பாற்ற முடியாத சூழலில் ஆண்ரூ இருந்திருக்கிறார். தான் நேசித்து வளர்த்த நாய்க்கு இப்படி ஒரு நிலமையா என்று ஏங்கிப்போய் நின்ற அவர், தனது செல்போனில், இந்தக் கோடூர சம்பவத்தை வீடியோ பதிவு செய்து, ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வெறிச்செயலை நிகழ்த்திய அந்த மூன்று பேரும் ஃபுரூனோவின் உடலை கடலில் வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளனர். இந்த வீடியோ விலங்குகள் நல ஆர்வலர்களிடத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சமந்தப்பட்ட மூவரில் இருவர் 18 வயது நிரம்பாதவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு சொந்தமான படகுக்கு கீழ் நாய் தூங்கியதால், அதை அடித்து கொன்றதாக அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால் சமந்தபட்டவர்கள் கைது செய்யவில்லை என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. நன்றி உள்ள ஜீவன் என்று நாயை சொல்லும் நாம். உண்மையில் நாம் நன்றி உள்ளவர்களா என்பதை யோசித்து பார்க்க வேண்டிய நேரமாக இது இருக்கிறது.







