முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளுகிறார். பின்னர் கோயில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தை ஒட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சூரசம்ஹார நிகழ்ச்சியை நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Advertisement:
SHARE

Related posts

நடிகை கொடுத்த மீ டு புகார்: ஆதாரமில்லாததால் விடுவிக்கப்படுகிறார் அர்ஜுன்!

Halley karthi

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு!

Niruban Chakkaaravarthi

காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு மதுபாட்டில்களை திருடிய கும்பல்!

Jayapriya