முக்கியச் செய்திகள் தமிழகம்

இது மழைகாலம்.. என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

தமிழ்நாட்டில் கனமழை பெய்துகொண்டிருப்பதால் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை மற்றும் வெள்ளக் காலங்களில் பொதுமக்கள் செய்யக் கூடிய மற்றும் செய்ய கூடாதவற்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மழைக் காலங்களில் செய்ய கூடியவை:

குடிநீரைக் காய்ச்சி வடிகட்டி ஆற வைத்த பிறகே அருந்த வேண்டும். அதிக அளவு காய்கறி, பயிர் வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் . வீட்டில் சமைத்த சூடான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.

சூப், ரசம், பால், டீ, காபி போன்ற திரவ உணவுகளையும் அருந்த வேண்டும். முன் கூட்டியே தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துகொள்ள வேண்டும். வீட்டை தூய்மையாக பராமரிக்க வேண்டும் . வீட்டின் வெப்ப நிலை குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மின்விளக்குகளை பொறுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

உடைந்த சுவிட்சுகள், பிளக்குகளை உடனே மாற்ற வேண்டும் . சரியான நில இணைப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மழைக் காலங்களில் செய்யக் கூடாதவை:

மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வுப் பெட்டிகள் அருகே செல்லக்கூடாது. அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லக் கூடாது. இடி மின்னல் ஏற்படும்போது டிவி, கணினி, செல்போன், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தயிர், வெண்ணெய், நெய் பொருட்களை தவிர்க்கவேண்டும்.

ஃப்ரூட் சாலட், பழ ஜூஸ்களில் கிருமித்தொற்று இருக்கக்கூடும், எனவே அவற்றையும் தவிர்க்க வேண்டும். மின்கம்பம் அருகே கால்நடைகளை கட்டக் கூடாது .

Advertisement:
SHARE

Related posts

உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

Halley karthi

அதிகரிக்கும் கொரோனா தொற்று; டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மூடல்!

Ezhilarasan

புகுஷிமாவில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீப ஒளி!

எல்.ரேணுகாதேவி