முக்கியச் செய்திகள் தமிழகம்

மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்: வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து தற்போது விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென் கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 12- ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. பல்வேறு ஏரிகள், அணைகள் நிரம்பி வழிவதால் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 119 அடியாக உள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டவுள்ள நிலையில், அணை யின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப் பட்டுள்ளது.

இதையடுத்து காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, பொதுப்பணித் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து சுரங்க மின் நிலையம் வழியாக நீர் திறக்கப்படுவதால், மின் உற்பத்தியும் தொடங்கியது.

Advertisement:
SHARE

Related posts

அமெரிக்காவில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்ட 2 இந்தியர்கள் யார்?

Gayathri Venkatesan

நகர்புறங்களில் 1.1 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

Saravana

கொரோனா தடுப்பூசி யார் போடலாம்? யார் போடக்கூடாது?