சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோயிலில், சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டையில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் அனைத்து…

சுரண்டை ஸ்ரீஅழகு பார்வதி அம்மன் கோயிலில், சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றாக இணைந்து சித்திரை திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கிய நிலையில் விழாவின் சிகர நிகழ்வாக  ஒன்பதாம் நாள் திருவிழாவையொட்டி மாலை 5 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பின்னா் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட திருத்தேர் சுரண்டையின் முக்கிய வீதிகளை சுற்றி வந்து இரவு கோயில் நிலையை வந்தடைந்தது. முன்னதாக சுரண்டையின் முக்கிய வீதிகளில் ஆங்காங்கே திரண்டு நின்ற மக்கள் தேங்காய் பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொடுத்து தேரில் வீற்றிருந்த ஸ்ரீ.அழகு பார்வதி அம்மனை வழிபட்டனர்.

பின்னா் திருத்தேர் கோயில் நிலையை வந்து அடைந்ததும்  இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

—- ரூபி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.