உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்

உச்சநீதிமன்றம் வழங்கிய 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.   விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட்…

உச்சநீதிமன்றம் வழங்கிய 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வருப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் மோடி அரசு சமூக நீதிக்கு எதிரான ஒரு அரசு என்பது அனைவருக்கும் தெரியும். காலம் காலமாக கல்வி வேலைவாய்ப்பில் மறுக்கப்பட்ட மக்களுக்காக உயரிய நோக்கத்தில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. 10 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு விவகாரத்தில் 3 நீதிபதிகள் ஆதரவாகவும், 2 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர். ஒருமித்த கருத்தோடு நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கவில்லை.

ஒரு பெரும்பான்மையுடன் நீதிபதிகள் வழங்கி உள்ள இந்த தீர்ப்பு என்பது சமூக நீதிக்கு எதிரானது. எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த தீர்ப்பை ஏற்கவில்லை. இந்த தீர்ப்பை மறுபரிசலனை செய்ய வேண்டும் என முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.