முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரராக விராட் கோலி தேர்வு

ஐசிசியின் அக்டோபர் மாத சிறந்த வீரருக்கான விருது விராட் கோலி மற்றும் வீராங்கனைக்கான விருது பாகிஸ்தான் அணியின் நிடா டார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரராக ஒருவரை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாத, சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தென் ஆப்ரிக்கா அணியின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்திற்காக விராட் கோலியும், இந்தியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்திற்காக டேவிட் மில்லரும், சிறந்த வீரருக்கான போட்டியில் இடம்பெற்றதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இவர்கள் மூவருக்குமான வாக்கெடுப்பு இணையதளம் வாயிலாக நடைபெற்றது. கிரிக்கெட் ரசிகர்கள் https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month என்ற இணையதள முகவரிக்குச் சென்று தங்களுக்கு விருப்பமான வீரர்களுக்கு வாக்களித்து வந்தனர். இந்நிலையில் இதன் முடிவுகளை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மகளிர் கிரிக்கெட்டில், இந்தியாவின் ஜெமிமா ரோட்ரீகஸ், தீப்தி ஷர்மா மற்றும் பாகிஸ்தான் அணியின் நிடா டார் ஆகியோருக்கு இடையே போட்டி நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் அணியின் நிடா டார் அதிக வாக்குகள் பெற்று, ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொட்டித் தீர்த்த கன மழை! வெள்ளத்தில் மிதந்த மும்பை!!

EZHILARASAN D

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் ; கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம், பொதுமக்கள் வெளியேவரவும் தடை!

Saravana

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது: அதிமுக வெளிநடப்பு!

Arivazhagan Chinnasamy