வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,…

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பு மற்றும் மத்திய அரசு தரப்பில் கடும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,
விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காண்பதற்கு குழு அமைப்பதே சிறந்தது என கருதுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதற்கு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்தனர்.பாரதிய கிசான் சங்க தலைவர் ஜிதேந்தர் சிங் மான் உள்ளிட்ட 4 பேர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் குழு கருத்து கேட்கும் என தெரிவித்த நீதிபதிகள், வேளாண் சட்டங்களால், விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என கூறினர். அதே நேரம், விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகள் ஊடுருவி உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தடை செய்யப்பட்ட அமைப்புகள் உள்ளனவா என்பது குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply