முக்கியச் செய்திகள் தமிழகம்

பெண்களிடம் ஆபாசமாக பேட்டி… யூடியூப் சேனல் குழுவினர் 3 பேர் கைது!

பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து அதனை யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

யூடியூப் சேனல்கள் பொது இடங்களில் மக்களிடம் கேள்வி கேட்டு, அதை வைரல் வீடியோவாக்கி வருகின்றனர். சிலர் வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்ற பார்வைகள் அதிகரிக்க வேண்டும் என்றும் பொது இடங்களில் ஆபாசமாக கேள்விகள் கேட்டு வருகின்றனர். இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பெண்களிடம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டதாக சென்னை டாக்ஸ் என்ற யூடியூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யூடியூப் சேனலில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து பதிவிறக்கம் செய்திருப்பதாக அவர்கள் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

அதன்படி வழக்குப்பதிவு செய்த சாஸ்திரி நகர் போலீசார், விசாரணை நடத்தினர். அதில், அந்த யூடியூப் சேனலில் இது போன்று பல பெண்களிடம் ஆபாசமாக கேள்விகள் கேட்டு, அதனை பதிவேற்றம் செய்திருப்பது தெரியவந்தது. அதன்படி அந்த யூடியூப் சேனலை சேர்ந்த தொகுப்பாளர் ஆசின் பாத்ஷா, ஒளிப்பதிவாளர் அஜய்பாபு மற்றும் சேனலின் உரிமையாளர் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். அந்த சேனலை முடக்கும் நடவடிக்கைகள் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:

Related posts

தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி?

Halley karthi

திஷா ரவி விவகாரம்; காவல்துறை மீது சரமாரி கேள்வி கணைகளை தொடுத்த நீதிமன்றம்!

Halley karthi

இணையத்தை கலக்கும் விலங்குகளின் ட்வீட்!

Vandhana

Leave a Reply