மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய மறு ஆய்வு கூட்டம் நடத்தப்படாததற்கு எதிரான மனு மீது பதிலளிக்க மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு…

ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய மறு ஆய்வு கூட்டம் நடத்தப்படாததற்கு எதிரான மனு மீது பதிலளிக்க மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் ஒருமுறை, ஒவ்வொரு மாநிலத்திற்கும் கூடுதலாகத் தேவைப்படும் ஐஏஎஸ் பணியிடங்களை பதவி உயர்வின் மூலமாக நிரப்ப ரிவ்யூ மீட்டிங் என்ற மறு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

 

இதுபோன்ற கூட்டம் தனது வயது வரம்பு காலத்தில் நடத்தப்படாமல் இருந்ததால் தனக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போனதாகவும் எனவே அந்தக் கூட்டத்தை நடத்தக்கோரி தமிழ்நாட்டை சேர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் பதவி உயர்வு என்பது அடிப்படை உரிமையாக அரசு ஊழியர்கள் கோர முடியாது என கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராகேஷ் சர்மா மூலம் முத்துராமலிங்கம் மேல்முறையீடு செய்திருந்தார்.

 

இந்நிலையில், இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.