தவெக-விற்கு ஆதரவா…?; நாளை கூடும் விசிக ஆலோசனை கூட்டத்தில் முடிவு – திருமாவளவன்…!

தவெகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து நாளை கூடும் விசிக ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காததால் தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸிடம் ஐந்து இடங்கள் உள்ளன.

இந்த சூழலில், தமிழ் நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்த தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமைக்கோரி கடிதம் வழங்கினார்.

இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10 மணி அளவில் உயர் மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்  தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று விசிக தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது :

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்குமா? என்ற கேள்விக்கு அக்கட்சி தலைவர் திருமாவளவன் பதில் அளித்ததாவது:-

ஆதரவு கேட்டு விஜய் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம். இது குறித்து இடதுசாரி கட்சிகள் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை முக்கியமான முடிவாக நான் பார்க்கிறேன். எங்கள் கட்சியின் பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். பொறுப்பாளர்கள் முடிவின் அடிப்படையில் இடதுசாரி கட்சிகளுடன் பேசுவோம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.