கஞ்சா போதையில் பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை – விழுப்புரத்தில் வணிகர்கள் கடையடைப்பு!

விழுப்புரத்தில் கஞ்சா போதையில் பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் எம் ஜி சாலையில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடியில் நேற்று பெண் ஊழியர்…

விழுப்புரத்தில் கஞ்சா போதையில் பல்பொருள் அங்காடி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் எம் ஜி சாலையில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடியில் நேற்று பெண் ஊழியர் ஒருவரிடம் கஞ்சா போதையில் வந்த இரு சகோதரர்கள் தனது தந்தையுடன் தகாத உறவு வைத்திருப்பதாகக் கூறி தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு வந்த அங்காடியின் ஊழியர் இப்ராஹிம் சண்டயை தடுக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த இளைஞர்கள் இப்ராஹிமை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை  கண்டித்து விழுப்புரம் வணிக சங்க அமைப்பினர் சார்பில் விழுப்புர நகர பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளன. இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் எம் ஜி சாலை, காமராஜர் வீதி, திருவிக வீதி போன்ற பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வணிகர்கள் முற்றுகை போராட்டம்

இந்நிலையில் 300க்கும் மேற்பட்ட வணிகர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக
வாயிலில் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை
தொடர்ந்து ஆட்சியர் பழனியிடம் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய இழப்பீடு அரசு
சார்பில் வழங்கவேண்டும், கொலை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

உடலுடன் உறவினர்கள் போராட்டம்

பின்னர் நான்குமுனை சந்திப்பு அருகே சென்னை-  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இப்ராஹிமின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கொலை செய்யப்பட்ட
இப்ராஹிம் உடலை பல்பொருள் அங்காடி முன் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

—கோ. சிவசங்கரன்

VLP MURDER BUNTH VISUVAL IN FTP.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.