ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா!

ஆரணி  பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதவாறு அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை அகற்றக்கோரி, ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில்…

ஆரணி  பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதவாறு அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை அகற்றக்கோரி, ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பெரியார் நகர் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதையடுத்து, ஆரணி அரசு மருத்துவமனை செல்லும் வழியே வசிக்கும் இவர்கள், அருகே உள்ள சுடுகாடு பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதால், தங்களுடைய அடிப்படை தேவைகளுக்கு நகர்ப்புறங்களை நோக்கி வெளியே வர முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த சுற்றுசு வரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், சுற்றுச்சுவரை அகற்றி தங்களுக்கு வழி அமைத்துத் தர வேண்டும் எனக் கூறி, ஆரணி பெரியார் நகர் பகுதி பொதுமக்கள், ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் நடந்த போரட்டத்தால், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த ஆரணி தாசில்தார் ஜெகதீசன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.