ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி மழை பெய்ததன் காரணமாக நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வோரு அணியும் மற்ற அணிகளுடன் முட்டி மோதின. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி முதலாவது குவாலிஃபயர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அடுத்ததாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இப்போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று குவாலிஃபயர் 2-க்கு தகுதி பெற்றது.
கடந்த மே 26 ஆம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 2-ல் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில், ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??
இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டன. இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்த நிலையில், மழை பெய்யத் தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதமானது. இரவு 11 மணி வரை மழை நீடித்ததால் , இறுதிப் போட்டியானது நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.