தமிழகம் செய்திகள்

திடீரென கோவில் மீது விழுந்த ராட்சத மரம் -உதகையில் பரபரப்பு

உதகையில் முருகர் கோவில் மீது ராட்சத மரம் திடீரென விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் யாரும் அப்போது கோவிலில் இல்லாததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை-கோட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் அருகே உள்ள சாலையின் ஓரத்தில் ராட்சத மரமொன்று உள்ளது.
உதகையில் கடந்த இரண்டு மாதங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலின் தாக்கமும்,இரவு நேரங்களில் பலத்த காற்றும் வீசி வருகிறது.

இந்நிலையில் கோவிலின் அருகே உள்ள ராட்சத மரமானது திடீரென விழுந்தது.இதில் கோவிலின் மேற்கூரைகள் முற்றிலும் சேதமடைந்தன. இச்சம்பவத்தின் போது நல்ல வேளையாக கோவிலில் பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.தகவல் அறிந்து சம்பவ விடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கோவிலின் மீது விழுந்த ராட்சத மரத்தை இயந்திரம் மூலம் அறுத்து அகற்றினர்,பின்னர் அவற்றை ஜேசிபி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“திமுக அரசு நாடகமாடக்கூடாது“: டிடிவி தினகரன்

Halley Karthik

ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதால்தான் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடிந்தது! -ஜெய்சங்கர்

Niruban Chakkaaravarthi

ஒழுக்கம் இல்லாத மாணவர்கள், தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை – நீதிமன்றம் கருத்து

EZHILARASAN D