திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழா மூன்றாம் நாளான நேன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைப்பெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசித் திருவிழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறக்கூடிய இத் திருவிழாவில் நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் 3-ம் திருநாளான நேன்று மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமாள் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை
அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும், எழுந்தருளி எட்டு திருவீதிகளிலும் உலா வந்துப் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.