பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கமுதக்குடி பார்த்திபனூர், மஞ்சூர், காமன்கோட்டை, நயினார் கோவில் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. அனல் காற்று வீசி வந்த நிலையில், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இந்நிலையில், பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று அதிகாலை முதல் திடீரென இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், வெப்பம் தணிந்தது.
இதையும் படியுங்கள் : குட்கா வழக்கு – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்!!
மேலும், சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. வெப்பம் கடுமையாக வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரெனப் பெய்த கோடை மழையால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
– ரூபி.காமராஜ்







