எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்…!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தை இழந்தது. இதனால் அக்கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு அணியும் உருவாகின.

இதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். ஆனால் அடுத்தடுத்து நடைபெற்ற சமரச முயற்சிகளையடுத்து இரு அணிகளும் ஒன்றிணைந்தது.

இந்த நிலையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ-வான அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் அளித்துள்ளார். முன்னதாக நேற்று அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து இருந்தார்.

ஏற்கனவே முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும் இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் ராஜினாமா செய்த 4 தொகுதிகள் என தமிழ் நாட்டில் காலியாக இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை 5 ஆக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.