திருவண்ணாமலை : வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!!

ஜமுனாமரத்தூர் வனப்குதி ஓடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராயத்தை மதுவிலக்கு காவல்துறையினர் அழித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் இருந்து ஆரணி, போளூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் கள்ளச்சாராயம் விநியோகம்  நடைபெறுவதாக…

ஜமுனாமரத்தூர் வனப்குதி ஓடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராயத்தை மதுவிலக்கு காவல்துறையினர் அழித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் இருந்து ஆரணி, போளூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் கள்ளச்சாராயம் விநியோகம்  நடைபெறுவதாக போளூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில், போளூர் மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளர் புனிதா தலைமையில், ஜமுனாமுத்தூர் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, ஈசானிய ஓடை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய டியூப்கள் கண்டுபிடிக்கப்பட்டது. லாரி டியூப்களில் இருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராயத்தை மதுவிலக்கு போலீசார் கீழே ஊற்றி அழித்தனர்.

இதையும் படியுங்கள் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி – ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

மேலும், வனப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்பனை செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்கப்படும் என மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

– ம.ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.