சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் மத்திய-மாநில அரசுகளின் உதவியால் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் மத்திய-மாநில அரசுகளின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள லைட் ஹவுஸ் என்ற வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 9-வது பிளாக், ஐந்தாவது மாடியில் வேலு, ஸ்டெல்லா தம்பதி வசித்து வந்தனர். இருவரும் காலையில் வேலைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் திடீரென வீட்டின் உள்ளே இருந்து புகை வந்துள்ளது.
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பிளாக்கில் வசிக்ககூடிய இளைஞர்கள் வாளி மற்றும் குழாய் மூலம் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அவர்கள் தண்ணீரைப் பாய்ச்சி தீயை அனைத்து கரும் புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாஷிங் மிஷினில் இருந்து ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அனைத்து துணிகளும், பெட்ரூமில் இருந்த கட்டில் மெத்தை முழுமையாக எரிந்து சாம்பமாகியது. இதே குடியிருப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி மின்கசிவு காரணமாக பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
—–அனகா காளமேகன்