முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக-பாஜக மோதல் தற்காலிகமானது- தொல்.திருமாவளவன் பிரத்யேக பேட்டி

அதிமுக-பாஜக இடையே தற்போது ஏற்பட்டிருக்கும் மோதலானது தற்காலிகமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவில் இருந்து நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைவது அதிர்ச்சியாகவும் அதே நேரம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதிமுக பாஜகவை தோளில் தூக்கி சுமக்கிறது என்ற விமர்சனம் தமிழகத்தில் வலுவாக இருக்கிறது. அதை விசிகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. தற்போது பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைவது அரசியல் தலைகீழாக நடக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. ஆனாலும் இந்த மோதல் தற்காலிகமானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக சேர்ந்து தான் போட்டியிடும். டெல்லியில் இருந்து தான் முடிவெடுப்பார்கள். பாஜக தனித்து போட்டியிட வாய்ப்பில்லை. எனவே தற்போது ஏற்பட்டிருக்கும் சலசலப்பினால் எதோ மாற்றம் நிகழ போகிறது, அதிமுக தனித்து போட்டியிட போகிறது என்று நாம் எண்ணிவிட முடியாது.

இதையும் படிக்கவும்: “ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை”- முதலமைச்சர்

திமுக கூட்டணியில் விசிக நல்லணிக்கத்தோடு இருக்கிறோம். எந்த உரலும் இல்லை. திமுக கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த வேண்டும் என்பதில் விசிக வலுவாக இருக்கிறோம். பாஜக தலைவர் சாதுரியமாக பேசுவதாக கருதிகொண்டு கற்பனை செய்து பேசுகிறார். விசிக திமுகவோடு இணக்கமாக இருக்கிறோம். திமுக அரசில் இருக்கும் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளை அவ்வப்போது போராட்டங்கள் மூலம் சுட்டிக்காட்டுக்கிறோம். அவ்வாறு சுட்டிக்காட்டுவதன் மூலம் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று கூறுவது தவறு. அதற்கான வாய்ப்பில்லை என்று கூறினார்.

மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடபோவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அகிலேஷ்யாதவ் காங்கிரசுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று தெரிவித்து ருப்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. எதிர்க்கட்சிகள் இந்த முறையும் ஒன்றுகூடாவிட்டால் அது பாஜகவிற்கு சாதாகமாக அமைந்துவிடும். ஏற்கனவே எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையாததால் தான் பாஜக 2வது முறையாக ஆட்சிக்கு வந்தது.

தமிழக முதலமைச்சர் பாஜகவை எதிர்க்கின்ற அனைத்து எதிர்க்கட்சிகளையும் சந்தித்து ஒருங்கிணைக்க வேண்டும். இது காலத்தின் தேவையாக உள்ளது. இதனை ஆலோசனையாக கூறவில்லை. ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன் என்று கூறினார்.

வடமாநிலத்தவர் விவகாரத்தில் அண்ணாமலை மீது வழக்கு போடப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பில் எந்த குறையும் இல்லை. பீகார் மாநில அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தபின் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிபடுத்தியுள்ளனர். அண்ணாமலை மீது அரசு உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை, எடுக்கும் என்று நம்பவுதாக கூறினார்.

பாமக, பாஜக இருக்கும் இடத்தில் தான் இருக்கும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுகவோடு தான் பாமக கூட்டணி அமைக்கும். ஏனெனில் பாமகவிற்கு தொடக்கம் முதலே பாஜக மறைமுக நெருக்கடியை கொடுத்து கொண்டு இருக்கிறது. எனவே பாமக திமுக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கும் தேர்தல் ஆணையம்

EZHILARASAN D

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு வாய்ப்பு மறுப்பு; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Halley Karthik

தேச பக்தியை நம்பாமல்? நலவாழ்வு திட்டங்களை நம்பும் பாஜக

Arivazhagan Chinnasamy