முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாடு அமைச்சரவையில் திடீர் மாற்றம்

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

2021ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தல் முடிவில் 159 இடங்களில் வெற்றி பெற்றது. 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சிக்கட்டிலில் திமுக அமர்ந்தது. மக்களவை தேர்தலுக்குப் பிறகு திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்து துறையை வழங்கினார் முதலமைச்சர். அரியலூர் மாவட்டச் செயலாளராகவும், இரண்டு முறை எம்எல்ஏ வாக இருந்த எஸ்.எஸ் சிவசங்கருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் அமைச்சரவையில் தற்போது சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துறையின் அடிப்படையில், போக்குவரத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். மேலும்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலிருந்து முதன்முறையாக ஒரு அமைச்சராக எஸ்.எஸ் சிவசங்கர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் முக்கியத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது அந்த மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

போக்குவரத்து விதிமீறல் – சென்னையில் நேற்று ஒரே நாளில் 3,702 வழக்குகள் பதிவு!

Syedibrahim

‘கருக்கலைப்பில் ஈடுபட்ட சதீஷ்குமார்; குண்டர் சட்டத்தில் கைது’

Arivazhagan Chinnasamy

காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

Halley Karthik