முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“பிற மாநிலங்களை சேர்ந்த 34 பேர் ஜம்மு – காஷ்மீரில் சொத்துகள் வாங்கியுள்ளனர்”

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலங்களை சேர்ந்த 34 பேர் சொத்துக்களை வாங்கியுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து காரணமாக அங்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சொத்துக்களை வாங்குவதற்கு தடை இருந்தது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு வெளிமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை பேர், ஜம்மு – காஷ்மீரில் சொத்துக்களை வாங்கி உள்ளனர் என பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஃபஸ்லுர் ரஹ்மான் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், ஜம்மு – காஷ்மீர் அரசு அளித்துள்ள தகவலின் படி, ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகு அம்மாநிலத்திற்கு வெளியே வசிக்கும் 34 பேர், ஜம்மு – காஷ்மீரில் சொத்துக்களை வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, ரேசி, உதம்பூர், கந்தர்பால் ஆகிய மாவட்டங்களில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Jayasheeba

உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்கிறார்

EZHILARASAN D

பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் கைது!!

Web Editor