விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டுள்ளது.
விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக வாரிசு படம் உருவாகியுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இத்திரைப்படம் வெளியாக உள்ளது. அண்மையில் வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு உளிட்ட பாடல்கள் யூடியூப் ட்ரெண்டிங்கில் இன்று வரை இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வாரிசு திரைப்படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.