வாசிப்போம் யோசிப்போம் என்ற தலைப்பில் நியூஸ் செவன் தமிழ் அன்பு பாலமும் சென்னை ரோட்டரி கிளப் நெய்தலும் இணைந்து அரசு பள்ளிகளில் புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னை, வில்லிவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எழுத்தாளர் சாமுவேல் மேத்யூ இலக்கை அடையும் புத்தகங்கள் குறித்து விரிவாக மாணவர்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல் சென்னை எக்மோர் பிரசிடென்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த கல்வியும் நூலகம் சென்று எவ்வாறு கற்பது என்ற முறையை விளக்கி எழுத்தாளர் ஆராய்ச்சியாளருமான கடற்கரை மாணவர்களிடத்தில் எளிய முறையில் உரையாடி தெளிவு படுத்தினார். மாணவர்கள் அனைவரும் அவருடன் கலந்துரையாடி தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதுமட்டுமின்றி சென்னை மேற்கு மாம்பலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 250 மாணவ மாணவியருக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்த வாசிப்போம் யோசிப்போம் கருத்தரங்கத்தை நடத்தினர். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் திரைப்பட இயக்குனர் சிதம்பரம் அவர்கள் கலந்துகொண்டு புத்தகமும் வெளி உலகமும் என்ற தலைப்பில் எளிமையான முறையில் உரையாற்றி புத்தக வாசிப்புக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி அவர்களும் பெருந்திரளான ஆசிரியர் பெருமக்களும் பங்கேற்று உன்னிப்பாக கவனித்து நியூஸ் செவன் தமிழுக்கும் ரோட்டரி கிளப் நெய்தலுக்கும் நன்றி தெரிவித்தனர்.