11 நாட்களில் ரூ.250 கோடி வசூலை குவித்த வாரிசு!

பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் 11 நாட்களில் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.     விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் கடந்த…

பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் 11 நாட்களில் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

 

விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான திரைப்படம் ’வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய்யின் வழக்கமான ஆக்‌ஷன் படமாக இல்லாமல் ஃபேமிலி செண்டிமெண்ட் படமாக வாரிசு படம் உருவாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. வாரிசு படம் ரிலீஸான 5 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடியும், 7 நாட்களில் ரூ. 210 கோடியும் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.

https://twitter.com/SVC_official/status/1617429232401141760

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ‘வாரிசு’ படத்தின் வெற்றி கொண்டாட்டம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு கேக் ஊட்டினார். இதில் விஜய்யுடன் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு , இசையமைப்பாளர் தமன் , பாடலாசிரியரும், படத்தின் வசனகர்த்தாவான விவேக் மற்றும் நடிகர் ஷாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், வாரிசு படத்தின் புதிய வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், வாரிசு படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.