டாப் 1 பொசிஷனை நெருங்கும் சுப்மன் கில் – ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியீடு

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை நோக்கி சுப்மன் கில் முன்னேறி வருகிறார்.    சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கான பட்டியலில் பாகிஸ்தான்…

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை நோக்கி சுப்மன் கில் முன்னேறி வருகிறார்.   

சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கான பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 829 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து வெறும் 6 புள்ளிகள் மட்டுமே பின்தங்கி, இந்திய வீரர் சுப்மன் கில் (823 புள்ளிகள்) இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் 3 இடங்கள் முன்னேறி 769 புள்ளிகளுடன் 3- வது இடத்திலும்,  மற்றொரு தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் க்ளாசன் 4 இடங்கள் முன்னேறி 756 புள்ளிகளுடன் 4- வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி ஆகிய இருவரும் தலா 747 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : பாக்ஸ் ஆஃபீசை அலற விட்ட ‘லியோ’ – சாதனை மேல் சாதனை..!

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 725 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்துள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் உள்ள போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், இரண்டாவது இடத்தில் உள்ள சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறுவார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.