பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மின்வெட்டு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயா நகரில் தமாகா சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். சொத்து வரி உயர்வு மின்வெட்டு உள்ளிட்ட அனைத்திற்கும் மத்திய அரசை காரணம் கூறுவது, ஆளும் திமுக அரசின் இயலாமையை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜிகே.வாசன் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 796 மெகாவாட் மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு மாநிலத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகவும், அதன் மூலம் நேற்று மாலை முதல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது பதிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.







