‘அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென மின்தடை’

ஓசூரில் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி தனியார் மண்டபத்தில் முதல் முறையாக மாமன்ற உறுப்பினர்களாக தேர்வானவர்களுக்கான பாராட்டு விழா நடத்தப்பட்டது.…

ஓசூரில் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி தனியார் மண்டபத்தில் முதல் முறையாக மாமன்ற உறுப்பினர்களாக தேர்வானவர்களுக்கான பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. சில நொடிகளில் ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டாலும் 30 நிமிடங்களுக்கு பிறகு மின்சாரம் வந்தது.

அண்மைச் செய்தி: “மாணவர்களுக்கு மின்வெட்டு மிகப்பெரிய பாதிப்பு”

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் கல்வி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 119 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், படிக்கும் நேரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சரியானது அல்ல என அறிவுறுத்திய அவர், ஒரு சிலரின் தூண்டுதலுக்கு மாணவர்கள் அடிப்பணிய வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன் சட்டமன்றத்தில், கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க கோரியும், தற்போதுள்ள கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் அதிமுக, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை மற்றும் இடதுசாரி கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தன.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேரும்போது எம்பிபிஎஸ் படிப்புக்கு 5,44,370 ரூபாய், பிடிஎஸ் படிப்புக்கு 3,45,000 ரூபாய் என்ற கட்டணத்துக்கு மாணவர்கள் ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார்.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபின் எம்பிபிஎஸ் படிப்புக்கு 1,44,000 ரூபாய், பிடிஎஸ் படிப்புக்கு 95,000 ரூபாயாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இதனால் அரசுக்கு 119 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.