விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் எழுத்து வடிவில் நின்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் இயங்கி வரும் தனியார்
கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை மிக சிறப்பாக கொண்டாடினர். இவ்விழாவில் அனைவரும் கேக் வெட்டி, ஆடல் பாடலுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையும் படியுங்கள்: சாக்ஷி மாலிக்கின் முடிவு வருத்தம் அளிக்கிறது: ரித்திகா சிங் வேதனை!
தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் எழுத்து வடிவில் நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், இவ்விழாவில் பள்ளி மழலையர் மற்றும் கல்லூரி மாணவர்களின் நடனம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.








