மது அருந்திவிட்டு இருசக்கரம் வாகனம் ஓட்டியபடி வீடியோ எடுத்த மாணவர்களுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை பாண்டியன் ஓட்டல் அருகே உள்ள கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் 3 பேர்கள் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், மதுரை சாத்தமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், சமூக ஊடகங்களில் ஒரு வைரல் வீடியோ பரவி வந்தது.
கல்லூரி மாணவர்கள் 3 பேர் பொறுப்பற்ற முறையில் அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்கின்றனர். பைக்கில் வேகமாக சென்றபடியே, மது பாட்டில்களை வைத்திருந்து குடித்துவிட்டு பொது மக்களுக்கு இடையூறு விளைவித்ததால், புகாரின் அடிப்படையில் மதுரை அண்ணா நகர் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், பின் விளைவுகளை யோசிக்காமல் செய்து விட்டோம். எனவே, எங்களுக்குமுன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார். இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அண்மைச் செய்தி :வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவை பிடிக்க டெல்லி விரைந்த தனிப்படை
மனுவை விசாரித்த நீதிபதிகள், 3 கல்லூரி மாணவர்களுக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், இந்த 3 பேரும் அரசு ராஜாஜி மருத்துவமனையிலுள்ள விபத்து சிகிச்சை பிரிவில் 4 வார சனிக்கிழமைகளில் காலை 8.00மணி முதல் மதியம் 12.00மணி வரை தங்கியிருந்து நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.







