வடமாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவை பிடிக்க 7 பேர் கொண்ட தனிப்படை டெல்லி விரைந்துள்ளனர்.
தமிழகத்தில் புலம்பெயர்ந்த பீகார் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பியதற்காக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பீகார் துணைமுதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தை பிரசாந்த் உம்ராவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்தியில் பேசியதற்காக பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த 12 தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டனர். புலம்பெயர்ந்தோர் மீதான் தாக்குதல்கள் நடந்தபோதிலும், தேஜஸ்வி யாதவ் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார்” என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.
அவரது ட்வீட் சர்ச்சையானதையடுத்து அந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர் என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். மாநிலம் மற்றும் மொழி அடிப்படையில் மக்களிடையே பகையை ஏற்படுத்தியதாக பிரசாந்த் உம்ராவ் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அண்மைச் செய்தி : ”மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு பாராட்டுகள்” – கமல்ஹாசன்
இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வட மாநில தொழிலாளர் குறித்து சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் பிரசாந்த் உம்ராவை கைது செய்ய திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் ஏழு பேர் அடங்கிய தனிப்படை டெல்லி விரைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.