உசிலம்பட்டியில், ஓம் வெள்ளிமலை திரைப்படத்தை கண்டு ரசித்த ஸ்ரீமத் போகர் பழனி ஆதினம் புலிப்பாணி சுவாமிகள் , சித்தர் கள் குறித்தும் சித்த மருத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைப்படமாக வெளிவந்துள்ளது என பாராட்டினார்.
அறிமுக இயக்குநர் ஓம்விஜய் இயக்கத்தில் உருவான ஓம் வெள்ளிமலை திரைப்படம்,
தமிழகம் முழுவதும் கடந்த பிப் -24ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பொன்னுச்சாமி திரையரங்கில், ஓம் வெள்ளிமலை திரைப்படத்தை ஸ்ரீமத் போகர் பழனி ஆதினம் புலிப்பாணி சுவாமிகள்,
இயக்குநர் ஓம்விஜய், பாடலாசிரியர் மணிமாறன் மற்றும் பட குழுவினர்களுடன் கண்டு ரசித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீமத் போகர் பழனி ஆதினம் புலிப்பாணி
சுவாமிகள் தெரிவித்ததாவது..
“பெரும்பாலும் எங்களை போன்ற சித்தர்கள் திரைப்படங்களை காண்பது இல்லை. சித்தர்கள் குறித்தும் சித்த மருத்துவம் குறித்தும் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை இன்று கண்டு ரசித்தேன்
பின் வரும் காலங்களில் சித்தர்கள் வருவார்கள் என உணர்த்து, சித்த மருத்துவம் குறித்து ஒரு விழிப்புணர்வு படமாக உருவாக்கியுள்ளார்கள். போகர் மீண்டும் வருவார் என்பதை எடுத்து காட்டும் விதமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.
கடந்த கொரோனா காலத்தில் மக்கள் என்னவெல்லாம் அவதியுற்றனர் என்பதை அறிந்தோம், இதுபோன்ற இன்னும் பல நோய்களுக்கு சித்த மருத்துவம் மருந்தாக அமையும் என கூறி, படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
-ம. ஸ்ரீ மரகதம்