திருவெள்ளைவாயல் அரசுமேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் ரூ.5 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் மற்றும் நூலகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்து திருவெள்ளைவாயல் கிராமம் உள்ளது. இந்த
கிராமத்தில் வயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த
பள்ளியில் சுமார் 680 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இதற்கிடையே இன்று
முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளிக்கு அறிவியல் ஆய்வுக் கூடத்தை புதுப்பித்தனர். புதிய தோற்றத்தில் மாறிய அறிவியல் ஆய்வுக்கூடத்தை பள்ளிக்கு அர்ப்பணித்தனர். மேலும் பள்ளியில் அமைந்துள்ள நூலகத்திற்கு புதிய நூல்களையும், புதிய புத்தக அடுக்குகளையும் வாங்கி அளித்தனர். மேலும், குடிநீர் மையத்தையும் அமைத்துக் கொடுத்தனர்.
இதைதொடர்ந்து, முன்னாள் ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு செய்து ஆரத்தி எடுத்து அவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.