மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரீ டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக நேற்று சென்னையில் போராடிய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் அடக்குமுறைகளை மீறி மாணவர்களின் போராட்டம் இரவு – பகலாக தொடர்ந்து நடைபெறுகிறது.
டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் போராடுவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பதும், தடுப்பதும், கைது செய்வதும் வன்மையான கண்டனத்திற்குரியது.
நேற்று மாலை DYFI -SFI சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து இரவு 10 மணிக்கு மேல் விடுவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்குவதை ஒரு போதும் ஏற்கமுடியாது. போராட்டத் தீ பரவட்டும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




