தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ரதில் இருந்து பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி வருகிறது. அதன்படி இன்று தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆர். சிவபிரசாத், ஐ.பி.எஸ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அபிஷேக் குப்தா, ஐ.பி.எஸ். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஆயுத காவல் துணை ஆய்வாளராக இருந்த விஜயலட்சுமி ஐ.பி.எஸ் ஊர்க்காவல்படை டி.ஐ.ஜியாகவும், சென்னை குற்றப்பிரிவு சிஐடியாக இருந்த சண்முகப்ரியா லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு சரக எஸ்.பி.யாகவும்,

ராமநாதபுரம் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த மீரா உதவி காவல் கண்காணிப்பாளர், அலுவலக கணினிமயமாக்கல் பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.