தேர்வுக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு முதல் பருவத் தேர்வுகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் மறுவாய்ப்பு…

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக தேர்வு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு முதல் பருவத் தேர்வுகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் மறுவாய்ப்பு தேர்வுகளுக்கான கட்டணமும் கடந்த ஆண்டை விட இந்தாண்டு இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டது. பல்கலைகழகத்தின் இந்த முடிவால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். எனவே பல்கலைகழகம் அறிவித்துள்ள  தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கும்பகோனம் அரசினர் கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

மாணவர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாணவர்களை கலைந்து போக  வலியுறுத்தினர்.

இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.மேலும் மாணவர்கள் தடையை மீறி கல்லூரிக்குள் செல்ல முயன்றதால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
– வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.