போதையற்ற சமுதாயத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவை செயல்பாட்டை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ் லயோலா கல்லூரி என் நண்பன் உதயநிதி படித்த கல்லூரி என்றும் அவரின் நண்பனாக இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் எனவும் பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது எனக்கு பரிட்சியமான கல்லூரி தான் என்றும் படிப்பைக் காட்டிலும் சமுதாயத்தில அக்கறை காட்டுவது லயோலா கல்லூரி என்றும் நாட்டு மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் முதலில் குரல் எழுப்புவது லயோலா கல்லூரி என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் தான் போதையற்ற சமுதாயத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு உள்ளது என பேசினார்.
உலகிலேயே இளைஞர் சக்தி அதிகம் உள்ள நாடு இந்தியா எனவே நாட்டை நல்வழிப்படுத்தும் பொறுப்பு, இன்றைய மாணவர்களுக்கு உண்டு. அதோடு சமுதாய முன்னேற்றத்துக்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றும் 45 கோடி இளைஞர்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று பேசினார். நாட்டுப்பற்றில், மொழிப்பற்றில் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.