கேரள மாநிலத்தில், கல்லூரி மாணவர் சங்க தேர்தல் மோதலில், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி அரசு பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸின் கே.எஸ்.யு. மாணவர் அமைப்பினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூ.,-ன் எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பினருக்கும் இடையே கடும் சண்டை முற்றி கைக்கலப்பு ஏற்பட்டது.
இந்த மோதலில் கண்ணூர் பகுதியின் (SFI) இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த தீரஜ், அபிஷித், அமல் ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது.

இதில் படுகாயமடைந்த தீரஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக காங்கிரசை சேர்ந்த கே.எஸ்.யு. மாணவர் அமைப்பின் நிர்வாகி நிகில் பயிலியை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியிலும் SFI மற்றும் காங்கிரஸ் மாணவர் அமைப்பு இடையே நேரிட்ட மோதலில் 8 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







