முக்கியச் செய்திகள் கொரோனா

’புதுச்சேரியில் முழு ஊரடங்கு கிடையாது’

புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கிடையாது என்றும், பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், கோவிட் மேலாண்மை குழுவின் அவசர கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் கொரோனா கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறினார். முழு ஊரடங்கால் மக்கள் பீதி அடைவார்கள் என்பதால், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என குறிப்பிட்டார்.

மேலும், திருமணங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கலாம் என கூறினார். பொங்கல் விழா கொண்டாட தடை இல்லை என்றாலும், காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவமனைகளில் போதிய வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனக் கூறியதோடு, தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் அதற்கான ஆவணங்களை வைத்துக்கொள்வதும் அவசியம் என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Advertisement:
SHARE

Related posts

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: மே 20-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

Halley Karthik

சங்கர் ஜிவால் உள்பட 5 அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து.

Saravana Kumar

அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் சீரமைப்பு பணி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Arivazhagan CM