முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! டெல்லியிலும் உணரப்பட்டது

நேபாளத்தில் இன்று மதியம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்,அண்டை நாடான இந்திய தலைநகர் டெல்லி மற்றும் ராஜஸ்தானிலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8-ஆக பதுவக்கியுள்ளது.

நேபாளத்தில் செவ்வாய்க்கிழமையான இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள ராஜஸ்தான் போன்ற பகுதிகளிலும் வலுவான நிலநடுக்கமாக உணரப்பட்டது. “நேபாளத்தில் இன்று பிற்பகல் 2:28 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது” என்று நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.இது நேபாளத்தின் ஜும்லா மாவட்டத்தின் வடமேற்கில் 10 கிமீ மற்றும் 63 கிமீ ஆழத்தில், தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கிமீ தொலைவில் பதிவாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலநடுக்க மையம் நேபாளத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் இருந்து கிழக்கே 148 கி.மீ தொலைவில் உள்ளது. டெல்லி – என்சிஆர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் நிலநடுக்கத்தின் போது கூரை மின்விசிறிகள் மற்றும் வீட்டுப் பொருள்கள் நடுங்கும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான வீடியோக்களை சமூக வலைதளங்களில்  பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில் நேபாளத்தின் சுதுர்பச்சிம் மாகாணத்தில் உள்ள பஜுரா மாவட்டத்தின் மேலா பகுதியில் நிலநடுக்கம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:43 மணியளவில் அப்பகுதியைத் தாக்கியது என்று நிலநடுக்க அளவீட்டு மையத்தின் தலைவர் லோக்விஜய அதிகாரி, ஏகாந்திபூர் செய்தி இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் மேற்கு நேபாளத்தின் பரந்த பகுதிகளில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், அது அண்டை நாடான டெல்லி மாற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் பெரிய அளவில் உணரப்பட்டதாகவும் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மோனிகா தஹல் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

இதற்கு முன்பாக மேற்கு நேபாளத்தில் கடந்த டிசம்பர் 2022 -ஆம் ஆண்டு ,அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் தாக்கின. ஏப்ரல் 2015 – ல், நேபாளத்தை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான பேரழிவுகரமான நிலநடுக்கத்தால் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர். 22,000 பேர் காயமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் 800,000 வீடுகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது .

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: இன்று நடைபெறுகிறது

G SaravanaKumar

பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர்

G SaravanaKumar

தேசிய விளையாட்டுத்துறை விருது பெறும் தமிழக வீரர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

EZHILARASAN D