வலுப்பெற்றது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் – இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு…

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்த கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்மண்டலம், மேற்கு வட மேற்கு திசையில் கடந்த ஆறு மணி நேரத்தில் 5 km வேகத்தில் நகர்ந்து இன்று காலை 5:30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கே சுமார் 540 கிமீ போர்ட் பிளேயர்- க்கு தொலைவிலும் தெற்கு தென்மேற்கு 1460 கி மீ  காக்ஸ் பஜாரின் (வங்காளதேசம்) தொலைவிலும் மற்றும் தெற்கு தென்மேற்கு 1350கி மீ சிட்வே (மியான்மர்) க்கு தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது சில நேரத்தில் வடமேற்கு திசையிலும் மற்றும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அதே பகுதியில் படிப்படியாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது. பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அது படிப்படியாக மேலும் தீவிரமடைந்து நாளை காலை தீவிர  புயலாகவும், மே 12 காலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடலில் அதிதீவிர புயலாகவும் மாறும்.

அதன்பிறகு, அது படிப்படியாக மீண்டு, வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மே 13-ல் இருந்து சற்று வலுவிழந்து, மே 14-ம் தேதிக்கு முற்பகல் வேளையில் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளைக் கடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கிமீ வேகம் முதல் 130 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.