குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவன மருந்துகளின் பயன்பாடு நிறுத்தம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

குளோபல் ஃபார்மர் ஹெல்த்கேர் நிறுவன மருந்துகள் பயன்பாட்டில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், சென்னையைச் சேர்ந்த குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த கண் சொட்டு…

குளோபல் ஃபார்மர் ஹெல்த்கேர் நிறுவன மருந்துகள் பயன்பாட்டில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், சென்னையைச் சேர்ந்த குளோபல் ஃபார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்திய ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த மருந்தை பயன்படுத்திய 3 பேர் கண் பார்வை இழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, அந்த மருந்துகளை திரும்பப் பெறுவதாக குளோபல் ஹெல்த் கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “குளோபல் ஃபார்மா ஹெல்த் கேர் நிறுவன மருந்தை பயன்படுத்தியதால் கண் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டது என்பது உறுதி செய்யும் வரை, அந்த மருந்துகளின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை குளோபல் ஃபார்மா ஹெல்த் கேர் நிறுவனத்தின் மருந்துகள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் யாரும் இந்த மருந்தை பயன்படுத்துவதில்லை. தமிழகத்திலும் நிறுவனம் மட்டுமே உள்ளது. பொதுமக்கள் யாரும் இந்த மருந்தை பயன்படுத்துவதில்லை. முழுக்க முழுக்க இந்த மருந்தானது வெளிநாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அந்த மருந்தை பயன்படுத்தியதால், பாதிப்பு ஏற்பட்டு இருக்குமா என்பது குறித்து முழு விவரம், அதற்கான அறிக்கையும் வரும்வரை அந்த மருந்து நிறுவனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தகவல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.