2030ம் ஆண்டில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடக உயர இந்த நிதிநிலை அறிக்கை உதவும் என மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராத்தியா எம் சிந்தியா மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் செய்தியாளர்களை சந்திதனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மகளிர் மற்றும் பாதுகாப்புக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. 3வது ஆண்டாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது மாநிலத்திற்கும், நாட்டுக்கும் GDP வளர்ச்சி அதிகரிக்கும் என்று கூறினார்.
கடந்த காங்கிரஸ் 10 ஆண்டுகளில் ஆட்சியில் சாலை மேம்பாட்டுக்கு ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் இது வரை மட்டும் ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் தான் கட்டப்பட்டது. ஆனால் பாஜக ஆட்சியில் 8 ஆண்டுகளில் 73 புதிய விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேட்கள் கட்டப்பட்டுள்ளது. 150 விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபெட்கள் அடுத்த சில ஆண்டுகளில் கட்டபட உள்ளது. இது போன்ற கட்டமைப்புகள் தான் இந்தியாவை உலக நாடுகளுக்கு தலைமை தாங்க செய்யும் என்றார்.
சிறு குறு தொழில்களில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இந்த நிதிநிலை அறிக்கை அனைவருக்குமானது. 2030ம் ஆண்டில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடக உயர இந்த நிதிநிலை அறிக்கை உதவும். தற்போது சென்னை விமான நிலையத்தில் அனைத்து விதமான வசதிகளும் அதிக அளவில் தரமனாதாக உள்ளது.
பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும். அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. விமான நிலையம் அமைக்க எழுந்திருக்கும் எதிர்ப்புகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மாநில அரசு தான் தீர்வு காண வேண்டும். நிலம் கையக படுத்துவது தொடர்பான அனைத்தும் மாநில அரசு தான் செய்ய வேண்டும். எங்கள் பணி விமான நிலையம் அமைப்பது மட்டுமே. அதற்கான பணிகளை மத்திய அரசு தரப்பில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.







