முக்கியச் செய்திகள் தமிழகம்

இறந்து பிறந்த குழந்தை; மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

திருத்தணி அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்து பிறந்ததால் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் புஷ்பநாதன் செம்பருத்தி தம்பதியினர். திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் தற்போது பிரசவத்திற்காக திருத்தணி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவர்கள் 3 நாட்களாக அழைக்கழித்ததால் குழந்தை இறந்து பிறந்ததாக கர்பிணி பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து கர்ப்பிணி பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்க வில்லை என பெண்ணின் உறவினர்கள் தலைமை மருத்துவரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினருக்கும், செம்பருத்தியின் உறவினர்களுக்குமிடையே வாக்குவாதம் தொடர்ந்ததால் திருத்தணி அரசு மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது.

முறையான சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்து பிறந்ததாக தலைமை மருத்துவர் ஆனந்தகுமாரிடம் செம்பருத்தியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து உறவினர்கள் அங்கிருந்து சென்றனர்.

Advertisement:
SHARE

Related posts

கடனை திருப்பி செலுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர்

Jeba Arul Robinson

தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

Saravana Kumar

திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்ற தினம் இன்று

Saravana Kumar