முக்கியச் செய்திகள் தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 3-ம் ஆண்டு நினைவு தினம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல் துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் 2வது யூனிட் விரிக்காத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியார்புரம், பண்டாரம்பட்டி, மடத்தூர், மீளவிட்டான் உள்ளிட்ட, ஆலையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த தொடர் போராட்டத்தின் 100-வது நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தின் 3-ம் ஆண்டு நினைவுதினம், குமரெட்டியார்புரத்தில் இன்று கடைபிடிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிந்த ஸ்னோலின், தமிழரசன், ஜான்சி, கந்தையா, கிளாஸ்டன், பரத்ராஜ், உள்ளிட்டோரின், அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்களுக்கு பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement:

Related posts

100 நாட்களில் நடவடிக்கை எடுக்க முடியுமா? முதல்வர் பழனிசாமி

Ezhilarasan

திருக்குறள் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது: ஜே.பி.நட்டா

Niruban Chakkaaravarthi

ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது : பரப்புரையில் வைகோ!

Gayathri Venkatesan