ஈரோட்டில் வளர்ப்பு மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டை சேர்ந்த பெண் ஒருவர், கணவரை பிரிந்த நிலையில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு கணேஷ் என்ற லாரி ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இரண்டு மகள்களுக்கும் கணேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் எனக் கூறியதோடு இரண்டு மகள்களின் உடலிலும் சூடு வைத்து மிரட்டியுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த தாய் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் கணேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.







