பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இறகுப்பந்து பயிற்சியாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த பிரசன்னா குமரன் என்பவர், பிரபல தனியார் நிறுவனத்தின் இறகுப்பந்து பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட குடும்பத்தினரை இறகுப்பந்து பயிற்சியாளர் பிரசன்னா குமரன் அவதூறாகப் பேசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் தாய், மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து இறகுப்பந்து பயிற்சியாளர் பிரசன்னா குமாரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது போக்சோ உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.







