முக்கியச் செய்திகள் குற்றம்

இளைஞரை வழிமறித்து கூகுள் பே மூலம் பணத்தை நூதன முறையில் வழிப்பறி

சென்னையை அடுத்த ஆவடி அருகே, இளைஞரை வழிமறித்து கூகுள் பே மூலம் பணத்தை நூதன முறையில் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த அஜித்குமார், ஆவடிக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். ஆவடி அருவே உள்ள ஆயில்சேரி பகுதியில் வந்தபோது, லிப்ட் கேட்ட ஒருவரை ஏற்றிக்கொண்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிறிது தூரம் சென்றது, 2 பேர் அஜித்தை வழிமறித்துள்ளனர். வாகனத்தை நிறுத்தியதும், வழி மறித்த 2 பேரும், லிப்ட் கேட்டு வந்த நபரும் சேர்ந்து அஜித்தை சரமாரியாக தாக்கி, செயின், மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டுள்ளனர்.

பின்னர், செல்போனை பறித்து, கூகுள் பே பாஸ்வேர்டை மிரட்டி வாங்கி, அஜித்குமாரின் அக்கவுண்டிலிருந்த 13 ஆயிரம் ரூபாய் பணத்தையும் தங்களது அக்கவுண்டுக்கு மாற்றிக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, அஜித் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆவடி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், ஹரிதாஸ், தனசேகர் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலவச பயணம் வேண்டாம் என்று பெண்கள் புறக்கணிக்க வேண்டும்- பிரேமலதா

G SaravanaKumar

ஒற்றைத் தலைமை விவகாரம்: ஓபிஎஸ்-க்கு ஆர்.பி.உதயகுமார் முன்வைத்த கோரிக்கை

Web Editor

என்ன சொல்கிறது ‘விக்ரம்’ ட்ரெய்லர்

Arivazhagan Chinnasamy