முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பாலியல் வன்கொடுமை முயற்சி: ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

மதுரையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டத்தில் உள்ள மீனவர் சங்க கட்டிடம். இதனருகே பெண் ஒருவரிடன் நேற்று நள்ளிரவு ரவுடி குருவி விஜய் என்பவர், பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்றார். இதையடுத்து அந்தப் பெண் கூச்சல் போட்டார். இதைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர் .

அங்கு விரைந்து வந்த போலீசார், ரவுடி குருவி விஜய்யை பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடியின் கூட்டாளிகள், போலீசாரை தாக்க முயன்றனர். இதனையடுத்து ரவுடி விஜய்யின் காலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அவர் அங்கேயே கீழே விழுந்தார். அவரை பிடித்த போலீசார், அவர் கூட்டாளிகளையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.

காலில் காயமடைந்த ரவுடியை, சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அவர் கூட்டாளிகளிடம் போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement:
SHARE

Related posts

புதிய கட்டுப்பாடுகளால் உணவகங்கள் பாதிக்கப்படும் – உரிமையாளர்கள் வேதனை

Gayathri Venkatesan

மத்திய அரசு அறிவித்த ரூ.50 லட்சம் காப்பீடு திட்டம் ரத்து: புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

எல்.ரேணுகாதேவி

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: திமுக எம்.பிக்கு ஜாமீன்

Halley karthi